முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

இலங்கையர்களுக்கான தாய்லாந்து விசா சலுகை இரத்து

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தாய்லாந்தில் விசா இன்றி நுழைவதற்கான சலுகை இனி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இலங்கையர்களுக்கான தாய்லாந்து விசா சலுகை இரத்து

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தாய்லாந்தில் விசா இன்றி நுழைவதற்கான சலுகை இனி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்து அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திருத்தப்பட்ட நுழைவு விதிமுறைகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட விசா விலக்குகள் மற்றும் வருகையின்போது வழங்கப்படும் விசா தொடர்பான புதிய நடைமுறைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி அந்நாட்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் தாய்லாந்து அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மீளாய்வுக்கு அமைவாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, முன்னர் வழங்கப்பட்ட 60 நாட்கள் விசா இன்றி தங்குவதற்கான சலுகை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், குறுகிய காலப் பயணங்களுக்காக விசா இன்றி நுழைய அனுமதிக்கப்படும் நாடுகளின் பட்டியலும் திருத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதார நலன்கள், இருதரப்பு பரஸ்பர நன்மைகள், மேலதிக விசா சலுகைகளை குறைத்தல் மற்றும் தாய்லாந்தின் மின்னணு விசா (e-Visa) முறைமையின் பயன்பாடு ஆகிய காரணிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்கு பயணம் செய்யும் இலங்கையர்கள் பயணத்திற்கு முன்னர் உரிய விசாவைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

இதற்காக தாய்லாந்தின் இணையவழி e-Visa முறைமை ஊடாக விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். கொழும்பிலுள்ள தாய்லாந்து இராஜதந்திர தூதரகமும் செப்டெம்பர் 4ஆம் திகதி வெளியிட்ட அறிவித்தல் மூலம் இந்த புதிய விசா நடைமுறை தொடர்பில் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதுள்ள விசா சலுகை முறையின் கீழ் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தாய்லாந்திற்குள் நுழையும் இலங்கை சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட காலம் நிறைவடையும் வரை அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்