முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

நாப்தா, எரிபொருள் எண்ணெய் விலை குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாப்தா மற்றும் எரிபொருள் எண்ணெயின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்ட…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நாப்தா, எரிபொருள் எண்ணெய் விலை குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாப்தா மற்றும் எரிபொருள் எண்ணெயின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலைத் திருத்தம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

முன்னர் ரூ.210 ஆக இருந்த ஒரு லீற்றர் நாப்தாவின் விலை ரூ.35 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.175 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ரூ.248 ஆக இருந்த ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலை ரூ.38 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.210 ஆகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்