முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

உலக சந்தையில் தங்க விலை சரிவு

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01) சற்று குறைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் இந்த வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தைத் தரவுகள் குறித்து வர்த்தக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
உலக சந்தையில் தங்க விலை சரிவு

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01) சற்று குறைந்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் இந்த வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தைத் தரவுகள் குறித்து வர்த்தகர்களின் கவனம் திரும்பியுள்ளமை இதற்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஸ்பொட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 சதவீதம் குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, எதிர்கால வர்த்தகங்களுக்கான தங்கத்தின் விலை 0.1 சதவீதம் அதிகரித்து, 4,485.30 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறித்து எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், எண்ணெய் விலையும் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட்டி விகிதங்கள் அதிகரிப்பது பொதுவாக வட்டி வருமானம் வழங்கும் சொத்துக்களின் கவர்ச்சியை அதிகரிப்பதால், தங்கத்தின் விலையில் அழுத்தம் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏனைய விலைமதிப்புமிக்க உலோகங்களில், வெள்ளியின் விலை 0.3 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 66.34 அமெரிக்க டொலர்களாகவும், பிளாட்டினத்தின் விலை 0.1 சதவீதம் உயர்ந்து 1,793.03 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

பல்லேடியத்தின் விலை 1,356.75 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்