கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது ‘ஐஸ்’ போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




