மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, 2026 ஜூலை மாதத்தில் 7.3% ஆக பதிவான இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 8% ஆக அதிகரித்துள்ளது.
2026 ஜூலை மாதத்தில் 6.3% ஆக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8.5% ஆக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உணவல்லாத பணவீக்கம் ஜூலை மாதத்தில் பதிவான 7.8% இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7.7% ஆக சிறிதளவு குறைந்துள்ளது.




