அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக செயற்பாட்டாளர்களான இராஜ் வீரரத்ன, சாமர விஜேசூரிய, நந்தன குடா மீகொட, நிலந்த சத்சர கமகே மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், குறித்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




