முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

நீதிபதிகளின் ஓய்வு வயது: ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் இல்லை

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என சியாம் மகா நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நீதிபதிகளின் ஓய்வு வயது: ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் இல்லை

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என சியாம் மகா நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் மனித உரிமைகள் அமைப்பொன்றின் பிரதிநிதிகளை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கடந்த காலங்களிலும் மகா சங்கத்தினர் ஆட்சியாளர்களுக்கு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடிதம் கிடைத்தமை தொடர்பில் குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளல் அறிவிப்பு வழங்கப்பட்ட போதிலும், இம்முறை குறித்த கடிதம் கிடைத்ததா இல்லையா என்பது தொடர்பில்கூட இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷண சுப்விக்ரம, உலகின் பல நாடுகளில் நீதிபதிகளின் பதவிக்காலம் 60 வயதைக் கடந்தும் தொடர்வதால், இலங்கையிலும் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதில் பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்