முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
அரசியல்

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு பெய்லி பாலங்கள்

இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவியின் மற்றொரு கட்டமாக, 250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுடைய பெய்லி பாலங்களின் தொகுதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு பெய்லி பாலங்கள்

இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவியின் மற்றொரு கட்டமாக, 250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுடைய பெய்லி பாலங்களின் தொகுதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதன்படி, ‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்தியாவின் மீள்கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பொதியின் ஒரு பகுதியாக இந்தப் பாலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் இந்தப் பெய்லி பாலங்களை இந்திய இராணுவப் பொறியியலாளர்கள் நிறுவவுள்ளனர்.

இதன் மூலம் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்கும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்