முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
அரசியல்

சொத்து விபர வெளியீடு தொடர்பான வர்த்தமானி திருத்தம்

முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்று மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பொதுமக்களுக்கு வெளியிடக்கூடிய வகையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்துடன் தொடர்புடைய கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சொத்து விபர வெளியீடு தொடர்பான வர்த்தமானி திருத்தம்

முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்று மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பொதுமக்களுக்கு வெளியிடக்கூடிய வகையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்துடன் தொடர்புடைய கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை வெளியிடுவது இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களாக சமூகத்தில் இது தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றன.

எவ்வாறாயினும், இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, புதிய திருத்தத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை வெளியிட முடியும் எனத் தெரிவித்தார்.

அதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் அல்லாத ஏனைய நபர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்