துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் மற்றும் மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026.07.23 அன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பியாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026.08.05 அன்று லேக்ட்ரைவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளில், குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இவரே என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபருடன் இருந்த பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த குற்றச் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




