நீதிமன்றங்களில் விசாரணைக்கு உள்ளாகி வரும் வழக்குகளில் ஆஜராகாத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதற்காக சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) உதவியையும் பெற்றுக்கொண்டு, அமெரிக்க நீதிமன்றத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் ‘திவயின’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவையான சந்தேகநபர் ஒருவர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர் அந்த நாட்டின் பிரஜையாக இருந்தால், அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.




