இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தனது விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொடர்ச்சியான உயர்மட்ட இராஜதந்திர பரிமாற்றங்களின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு திட்டங்களுக்கு புதிய உத்வேகத்தை வழங்குவதும் இந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கமாகும்.




