முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

கொழும்பு-கண்டி வீதியில் கற்கள் சரிவு; பகுதி மூடல்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ மற்றும் கனேதென்ன பகுதிகளுக்கு இடையிலான வீதி பகுதி மூடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். வீதியில் கற்கள் சரிந்து விழும் அபா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கொழும்பு-கண்டி வீதியில் கற்கள் சரிவு; பகுதி மூடல்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ மற்றும் கனேதென்ன பகுதிகளுக்கு இடையிலான வீதி பகுதி மூடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வீதியில் கற்கள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், வாகன சாரதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கற்கள் சரிந்து விழுந்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மீண்டும் அறிவிக்கும் வரை குறித்த வீதியை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்