நீர்கொழும்பு–மினுவாங்கொடை வீதியின் பொலவலான பகுதியில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்து சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 வயதுடைய தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள்.
வீதியைக் கடந்து திரும்பிக்கொண்டிருந்த கண்டெய்னர் லொறியுடன் மோதிய இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய தாகொன்ன பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்டிருந்த மேலும் ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. CCTV காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




