முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

வென்னப்புவ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2026 ஜூலை 30 ஆம் திகதி காலை கொழும்பு–புத்தளம் பிரதான வீதியின் தும்மலதெனிய பகுதியில், புத்தளம் நோக்கிப் பய…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
வென்னப்புவ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2026 ஜூலை 30 ஆம் திகதி காலை கொழும்பு–புத்தளம் பிரதான வீதியின் தும்மலதெனிய பகுதியில், புத்தளம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்துகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின்புறம் பயணித்த இரு பயணிகள் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 58 வயதுடைய வைக்கால பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்