முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026 ஜூலை 30 ஆம் திகதி மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜயவ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
போதைப்பொருட்களுடன் மூவர் கைது

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஜூலை 30 ஆம் திகதி மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளால் வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 360 கிராம் ஹெரோயினுடன் 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் கண்டி உப பிரிவு அதிகாரிகள் யட்டவத்த வாலவெல பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 100 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கெப்பெட்டிபொல பொலிஸார் தம்பவின்ன பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 130 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வெல்லம்பிட்டிய, யட்டவத்த மற்றும் கெப்பெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்