முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பழமையான பொருட்கள் தேடிய இருவர் கைது

பழமையான தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் வீட்டொன்றில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் தமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026 ஜூலை 30 ஆம் திகதி மாலை தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பழமையான பொருட்கள் தேடிய இருவர் கைது

பழமையான தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் வீட்டொன்றில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் தமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஜூலை 30 ஆம் திகதி மாலை தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் அகழ்வுப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மஹாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்