சிகிரியா நகருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள், வீட்டு வளாகத்தில் இருந்த பலாமரத்தின் பழங்களைத் தின்னும் நோக்கில் சுமார் 200 அடி நீளமுள்ள சுற்றுச்சுவரை இடித்து வளாகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை 3.30 மணியளவில் மூன்று யானைகளும் சுவரை இடித்துவிட்டு வளாகத்திற்குள் நுழைந்து பலாப்பழங்களை உண்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்தபோதும், வாகனம் இல்லை என்ற காரணத்தால் அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என வீட்டு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வனவிலங்கு திணைக்கள அலுவலகத்திற்கு மிக அருகில் வீடு இருந்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
நீண்ட காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாக சிகிரியா மக்கள் தெரிவிக்கின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் சிகிரியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த யானைகளால் ஆபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.




