முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கஞ்சிபானி இம்ரானின் மிரட்டல் ஒலிப்பதிவு தொடர்பில் புதிய தகவல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரான், கதிர்காமம் மற்றும் தெவிநுவர தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்கவுக்கு விடுத்ததாக கூறப்படும் மிரட்டல் தொடர்பான குரல் பதிவை, அவருக்கு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கஞ்சிபானி இம்ரானின் மிரட்டல் ஒலிப்பதிவு தொடர்பில் புதிய தகவல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரான், கதிர்காமம் மற்றும் தெவிநுவர தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்கவுக்கு விடுத்ததாக கூறப்படும் மிரட்டல் தொடர்பான குரல் பதிவை, அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியவர் மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட தனுஷ்க கௌஷல்ய எனப்படும் ரத்மலானே குடு சைமா என தெரியவந்துள்ளது.

மலேசிய பொலிஸார் மற்றும் இலங்கை பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரை எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சிபானி இம்ரானின் முக்கிய உதவியாளராக செயற்பட்ட ரத்மலானே குடு சைமா தொடர்பில் பல்வேறு குற்றச் செயல்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், குறித்த குரல் பதிவை கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான உனாகுருவே சாந்த ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டு பஸ்நாயக்க நிலமேவுக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கஞ்சிபானி இம்ரான் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுத்த மிரட்டல் குரல் பதிவுகளை அவரது அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சிபானி இம்ரான் மலேசியாவில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை பொலிஸ் குழுவொன்று அண்மையில் மலேசியா சென்றிருந்தது. எனினும், பொலிஸார் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், ரத்மலானே குடு சைமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்