முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

இடைநிறுத்தப்பட்ட வீட்டு திட்டங்களை நிறைவு செய்ய புதிய திட்டம்

டைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ள வீட்டு நிர்மாணத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இடைநிறுத்தப்பட்ட வீட்டு திட்டங்களை நிறைவு செய்ய புதிய திட்டம்

டைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ள வீட்டு நிர்மாணத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் சுமார் 5,000 வீட்டு திட்டங்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் உள்ள வீடுகளை அடையாளம் கண்டு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக முன்னாள் அமைச்சின் செயலாளர்கள் இருவரின் இணைத் தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு தற்போது தகவல்களை சேகரித்து, நிறைவு செய்யக்கூடிய வீடுகளை அடையாளம் காணும் பணியிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரைநிலையில் உள்ள வீடுகளை நிறைவு செய்ய முடியாத குடும்பங்களுக்கு அடுத்த வருடம் உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 2,000 குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டு திட்டங்கள் உள்ளிட்ட வீட்டு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் விசேட கூட்டமொன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்