முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2026.07.27 அன்று காலை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் விமா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2026.07.27 அன்று காலை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 01 கிலோகிராம் 480 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்