முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
உள்ளூர்

செருப்பில் மறைத்த ஐஸ் போதைப்பொருளுடன் கர்ப்பிணி கைது

மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு வழங்குவதற்காக ஐஸ் மாத்திரைகளை எடுத்துச் செல்ல முயன்ற 34 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்ப…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
செருப்பில் மறைத்த ஐஸ் போதைப்பொருளுடன் கர்ப்பிணி கைது

மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு வழங்குவதற்காக ஐஸ் மாத்திரைகளை எடுத்துச் செல்ல முயன்ற 34 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ – பொதுவில் வீதி, கரம்பகொடயாய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், சிறையில் உள்ள தனது கணவரை பார்வையிடுவதற்காக மொனராகலை நகரத்திற்கு வந்திருந்த நிலையில், அங்குள்ள கடையொன்றில் செருப்பு ஜோடியை கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர், அந்த செருப்பின் அடிப்பகுதியை கழற்ற முயற்சித்ததை அவதானித்த ஒருவர், அது தொடர்பில் நகர பொலிஸ் காவலரணுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த பெண்ணின் கைப்பையில் இருந்த மின்விளக்கு சார்ஜர் ஒன்றை பரிசோதித்துள்ளனர். அதனை திறந்து பார்த்தபோது, செருப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் 12,400 மில்லிகிராம் ஐஸ் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் வைத்திருந்த குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள தனது கணவருக்கு வழங்குவதற்காக இந்த போதைப்பொருளை கொண்டு வந்ததாக விசாரணைகளில் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.

கர்ப்பிணி பெண் என்பதால், தேவையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் சாமிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பை மொனராகலை நகர பொலிஸ் காவலரணின் உப பொலிஸ் பரிசோதகர் தயானந்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்