முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

லங்கா சதொச 11 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது

லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குற…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
லங்கா சதொச 11 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது

லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு வெங்காயத்தின் விலை 71 ரூபாவினாலும், சிவப்பு பருப்பின் விலை 18 ரூபாவினாலும், கடலையின் விலை 8 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவப்பு பச்சை அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, உள்நாட்டு நாடு அரிசி, வெள்ளை சீனி, கோதுமை மா மற்றும் டின் மீன் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்த பொருட்களை புதிய சலுகை விலைகளில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்