முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

தேவிநுவரை பெரஹராவுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

கந்தர பொலிஸ் பிரிவிலுள்ள தேவிநுவரை உத்தபலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
தேவிநுவரை பெரஹராவுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

கந்தர பொலிஸ் பிரிவிலுள்ள தேவிநுவரை உத்தபலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

2026 ஜூலை 14 ஆம் திகதி ஆரம்பமான பெரஹரா ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. முதல் பெலி பெரஹரா ஜூலை 23 ஆம் திகதி தொடங்கியுள்ள நிலையில், ஜூலை 28 ஆம் திகதி காவடி பெரஹராவும், ஜூலை 29 ஆம் திகதி ரந்தோலி மற்றும் மகா பெரஹராவும் நடைபெறவுள்ளன.

ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு–கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், மாத்தறை மற்றும் தங்காலை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெரஹராவிற்காக நாடு முழுவதும் இருந்து பெருமளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ள 650 பொலிஸ் அதிகாரிகள், 100 விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்