முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு நிராகரிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேன்ம…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு நிராகரிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பில் நீண்ட நேரம் பரிசீலனை செய்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

இவ்வாண்டு உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையும் இரண்டாவது தடவையும் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்