முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

நல்லத்தண்ணியில் முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 2026.07.22ஆம் திகதி காலை, மூல்கம பகுதியிலிருந்து லக்சபா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நல்லத்தண்ணியில் முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

2026.07.22ஆம் திகதி காலை, மூல்கம பகுதியிலிருந்து லக்சபான நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோகினி ஆற்றில் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது, முச்சக்கரவண்டியில் சாரதி, மூன்று பாடசாலை மாணவர்கள் மற்றும் மற்றுமொரு ஆண் பயணி ஆகியோர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் மற்றைய ஆண் பயணி மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 26 வயதுடைய நல்லத்தண்ணி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்களும் மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்