முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
உள்ளூர்

சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்கள் மூவர் மூன்று வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு, நிகவெரட்டிய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வலான மத்தி…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்கள் மூவர் மூன்று வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு, நிகவெரட்டிய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபொத பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 52 லீற்றர் 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் (70 போத்தல்கள்) 44 வயதுடைய கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கொட்டேவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 78 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 36 வயதுடைய நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபொல வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் (200 போத்தல்கள்) 36 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு, நாகொல்லாகம மற்றும் மஹபாகே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்