முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

செம்மணி புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகை

யாழ்ப்பாணம் செம்மணி பொதுப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 423 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் புதன்கிழம…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
செம்மணி புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகை

யாழ்ப்பாணம் செம்மணி பொதுப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 423 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் புதன்கிழமை (23) அந்த இடத்தை பார்வையிடவுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தக் குழுவில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் இடம்பெறவுள்ளனர்.

செம்மணி பொதுப் புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த வாரம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்தப் பார்வைக்கு நீதிமன்ற அனுமதி கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தொல்லியல் நிபுணர்கள், நீதிமருத்துவ அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளிக்கிழமை (17) மேலும் 11 மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தமாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 423 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்