முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

தம்புள்ளையில் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹார சந்தி பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 2026 ஜூலை 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
தம்புள்ளையில் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹார சந்தி பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2026 ஜூலை 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் தம்புள்ளை, விஹார சந்தி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.

உயிரிழந்த நபருக்கும் அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதன் காரணமாக, சந்தேகநபர் பொல்லினால் தாக்கி இந்தக் கொலையை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 67 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்