முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

34,000 சிகரெட்டுகளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரியில்லாமல் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் (170 கார்ட்டன்கள்) உடன் பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
34,000 சிகரெட்டுகளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரியில்லாமல் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் (170 கார்ட்டன்கள்) உடன் பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலைய பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (16) காலை வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுடைய பெண்ணும் 33 வயதுடைய ஆணும் ஆவர். இருவரும் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்