முக்கியச் செய்தி
வெள்ளி, 17 ஜூலை, 2026
··
அரசியல்

2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி வெளிச்சம்

அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் அரசுக் கடன் தவணை தொடர்பான இணைய நிதி மோசடியால், இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியா…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி வெளிச்சம்

அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் அரசுக் கடன் தவணை தொடர்பான இணைய நிதி மோசடியால், இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியாக மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தெரியவந்தது.

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வங்கிகள் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நிராகரித்து பணத்தைத் திருப்பி அனுப்பியிருந்த போதிலும், மோசடியாளர்கள் அனுப்பிய போலி மின்னஞ்சல் வழிகாட்டல்களின் அடிப்படையில் இறுதியில் பணம் வேறு கணக்கிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய வங்கி, அரசுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் சட்டப் பொறுப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இத்தகைய இணைய நிதி மோசடிகளைத் தடுக்க சட்டங்களை திருத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்