முக்கியச் செய்தி
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்புயாழ்ப்பாணத்தில் புதிய மதுபான விற்பனை நிலையங்களுக்கு சாணக்கியன் எதிர்ப்புகணினி அமைப்புகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் இல்லை – ஸ்ரீலங்கன்மதுபானப் போத்தல் ஸ்டிக்கர் ஒப்பந்தம் குறித்து சாமர சம்பத் குற்றச்சாட்டுஊழல் எதிர்ப்புத் திட்டத்தைக் கண்காணிக்க பாராளுமன்றக் குழுதெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்புயாழ்ப்பாணத்தில் புதிய மதுபான விற்பனை நிலையங்களுக்கு சாணக்கியன் எதிர்ப்புகணினி அமைப்புகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் இல்லை – ஸ்ரீலங்கன்மதுபானப் போத்தல் ஸ்டிக்கர் ஒப்பந்தம் குறித்து சாமர சம்பத் குற்றச்சாட்டுஊழல் எதிர்ப்புத் திட்டத்தைக் கண்காணிக்க பாராளுமன்றக் குழு
Island edition
··
LankaNews
உள்ளூர்

6 ஆண்டுகளாக விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்கள் மீட்பு

ஹல்துமுல்ல, சொரகுணே உப தபால் அலுவலகத்தில் பணியாற்றும் கடித விநியோகஸ்தர் ஒருவர், விநியோகிக்க வேண்டிய 2,078 கடிதங்களை விநியோகிக்காமல் தனது வீட்டில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
6 ஆண்டுகளாக விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்கள் மீட்பு

ஹல்துமுல்ல, சொரகுணே உப தபால் அலுவலகத்தில் பணியாற்றும் கடித விநியோகஸ்தர் ஒருவர், விநியோகிக்க வேண்டிய 2,078 கடிதங்களை விநியோகிக்காமல் தனது வீட்டில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிக்கியவர் சொரகுணே உப தபால் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு பணியாற்றும் தபால் ஊழியர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டில் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) இருப்பதாக ஹல்துமுல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசோக இந்துனில் ரத்நாயக்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் அந்த வீட்டைச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, மெத்தையின் கீழ் குவித்து வைக்கப்பட்டிருந்த 12 பதிவுத் தபால் கடிதங்களும் சாதாரண தபாலுக்குச் சொந்தமான கடிதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2,078 கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடிதங்களை விநியோகிக்காமல் அவற்றை வீட்டில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்