‘2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின்’ கீழ் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அவற்றுக்குத் தலைமைத்துவம் வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, அக்குழுவின் பிரதித் தலைவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2026 செப்டெம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காகப் பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருமாறு:
ஹர்ஷண நாணயக்கார
சுனில் வட்டகல
கௌஷல்யா ஆரியரத்ன
ஜே. சி. அலவத்துகல
அனுராத ஜயரத்ன
சாணக்கியன் இராசமாணிக்கம்
ஓஷனி உமங்கா
பிரகீத் மதுரங்க
சந்திமா ஹெட்டிஆரச்சி
தர்மப்பிரிய விஜேசிங்க
தேவானந்த சுரவீர
எம். நிஸாம் காரியப்பர்




