முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

கஞ்சா கடத்தல்காரரின் ரூ.180 மில்லியன் சொத்துகள் முடக்கம்

பாரிய அளவில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர் எனக் கருதப்படும் ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என அழைக்கப்படும் ஜயசிங்க ஆரச்சிகே ஹேமந்த என்பவரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 180 மில்லியன் ரூபாய்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கஞ்சா கடத்தல்காரரின் ரூ.180 மில்லியன் சொத்துகள் முடக்கம்

பாரிய அளவில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர் எனக் கருதப்படும் ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என அழைக்கப்படும் ஜயசிங்க ஆரச்சிகே ஹேமந்த என்பவரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.

சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் சொத்துகளைச் சேகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் தம்புத்தேகம, கிரவல்வத்த மற்றும் மிதெனிய ஆகிய பகுதிகளில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள், கட்டிடங்கள், கடைத்தொகுதிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட எட்டு சொத்துகள் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபரின் இரண்டாவது மகனின் பெயரில் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு ஜீப் வாகனம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் மகனுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஜீப் வாகனமும் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், குறித்த ஜீப் வாகனத்தையும் 14 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்