முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

யாழில் திருவிழாவில் ஒலி பாதிப்பு: 157 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட அதிகளவான ஒலி காரணமாக பாதிக்கப்பட்ட பலர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
யாழில் திருவிழாவில் ஒலி பாதிப்பு: 157 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட அதிகளவான ஒலி காரணமாக பாதிக்கப்பட்ட பலர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55 பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்