முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

பதுளை வைத்தியசாலையின் காணாமல்போன வைத்தியரின் சடலம் மீட்பு

காணாமல்போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணர் வைத்தியரின் சடலம் மஹியங்கனை, மாபாகட 17ஆம் மைல்கல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பதுளை வைத்தியசாலையின் காணாமல்போன வைத்தியரின் சடலம் மீட்பு

காணாமல்போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணர் வைத்தியரின் சடலம் மஹியங்கனை, மாபாகட 17ஆம் மைல்கல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வியானா கால்வாய் அருகில் நேற்று (23) இரவு முதல் சந்தேகத்திற்கிடமான முறையில் கைவிடப்பட்டிருந்த கார் தொடர்பாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பின்னர் அந்த கார் காணாமல்போயிருந்த வைத்தியருக்கு சொந்தமானது என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காருக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் சில வகையான மருந்து மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்