முச்சக்கர வண்டி சேவையில் சாரதியாக இணைவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்தவுடன் இளைஞர்கள் முச்சக்கர வண்டி சாரதி தொழிலில் ஈடுபடுவதற்கு பதிலாக, அவர்களை மேலதிக கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கு வழிநடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முச்சக்கர வண்டி சாரதி தொழிலில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த உடனேயே இளைஞர்களை முச்சக்கர வண்டியை செலுத்தி தொழிலில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது எனவும், அதற்கு பதிலாக கல்வி மற்றும் தொழிற்பயிற்சி துறைகளில் தெளிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




