2026.08.23 அன்று அதிகாலை, கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 56 வயதுடைய கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்தொன்றின் போது, அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




