2026.08.22 அன்று காலை, ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம–வல்பொல வீதியில் வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு லொறிகள் மற்றும் கார் ஒன்று தொடர்புபட்ட விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
வல்பொல நோக்கி பயணித்த லொறியின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், எதிரே வந்த கார் மற்றும் மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளது. பின்னர் வீதியின் ஓரமாக பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரும், அவரது மகள் மற்றும் மகனும் லொறியில் மோதியுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரு குழந்தைகளும் பெண்ணும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி ராகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு லொறிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




