முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கஞ்சாவுடன் இருவர் கைது

2026.08.22 அன்று அதிகாலை மற்றும் பகல் வேளைகளில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமகல பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட இரு சுற்றிவளைப்புகளில் சந்த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கஞ்சாவுடன் இருவர் கைது

2026.08.22 அன்று அதிகாலை மற்றும் பகல் வேளைகளில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமகல பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட இரு சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்புகளில், 1,044 கிலோ 180 கிராம் கஞ்சாவுடன் ஒருவரும், 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டு ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 38 வயதுடைய எதம்பலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்