முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற 6 பேர் கைது

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026.08.19 அன்று காலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் பரந்தன் பகுதியி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற 6 பேர் கைது

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026.08.19 அன்று காலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் பரந்தன் பகுதியில் வீதி தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் வாகனங்களை சோதனையிட்டு வந்துள்ளனர்.

இதன்போது, மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் அனுமதிப்பத்திரங்களில் பொலிஸ் அதிகாரிகள் கையொப்பமிடுவதைத் தவிர்ப்பதற்காக இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து டிப்பர் வாகன சாரதிகளும், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 முதல் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் முல்லைத்தீவு, பளை, தர்மபுரம், விஸ்வமடு, கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 2026.08.19 அன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தலா 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்