முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபர் மேன்முறையீடு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கருதப்படும் ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட சில பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுக்க…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபர் மேன்முறையீடு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கருதப்படும் ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட சில பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்குத் தொடுநர் தரப்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே இந்த மேன்முறையீட்டின் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்