முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கியதாக ஷிரான் பாசிக் தகவல்

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முக்கிய போதைப்பொருள் வர்த்தகராகக் கூறப்படும் ஷிரான் பாசிக் , எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பெருமள…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கியதாக ஷிரான் பாசிக் தகவல்

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முக்கிய போதைப்பொருள் வர்த்தகராகக் கூறப்படும் ஷிரான் பாசிக், எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணத்தை செலவிட்டதாகத் தெரிவித்துள்ளதாக மத்திய குற்ற விசாரணைப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் சரியான தொகை இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், அரசியல்வாதிகளில் ஒருவரின் தேர்தல் பிரசாரத்திற்காக 50 பேருந்துகளையும் பெருமளவு பணப் பரிசையும் வழங்கியதாக ஷிரான் பாசிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷிரான் பாசிக்கிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு அரசியல்வாதிகளிடமும் எதிர்காலத்தில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் ஒருவர் களுத்துறை பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தனக்குச் சொந்தமானவை எனக் கூறப்படும் ஐந்து முக்கிய ஹோட்டல்கள் தொடர்பிலும் ஷிரான் பாசிக் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஹோட்டல்கள் தெஹிவளை–கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சோல் பீச் ஹோட்டல் தனக்குச் சொந்தமானது என்றும், அதற்கான பணத்தை தானே செலவிட்டதாகவும் ஷிரான் பாசிக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளில் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதற்காகவும் அவர் பணத்தை முதலீடு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றும் நோக்கில் இந்த வர்த்தக நடவடிக்கைகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரைப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சில ஹோட்டல்கள் வேறு நபர்களின் பெயர்களில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்கரையை அண்டிய காணிகளைச் சொந்தமாகக் கொண்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளில்கூட ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டு, அவை சட்டவிரோதமான முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, கல்கிஸ்ஸ பகுதியில் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களாகக் குறிப்பிடப்படும் அல்டோ தர்மே, படோவிட்ட அசங்க மற்றும் சாண்டோ ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்களும் தனது போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புபட்டிருந்ததாகவும் ஷிரான் பாசிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்