முன்னாள் அமைச்சரவை அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான தேஷானி குணரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தணமல்விலையில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




