2026.08.18 அன்று மாலை நாஉல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெடில்ல குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாஉல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 22 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குளத்தில் குளிக்கச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாஉல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




