முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கோடா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது

2026.08.18 அன்று கட்டுநாயக்க, ஹிரண மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கோடா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது

2026.08.18 அன்று கட்டுநாயக்க, ஹிரண மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுவத்த பகுதியில் மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 3,780 லீற்றர் கோடாவுடன் 22 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருக்கொட பகுதியில் பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 67 லீற்றர் 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,110 லீற்றர் கோடாவுடன் 53 வயதுடைய அருக்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 2,340 லீற்றர் கோடாவுடன் 33 வயதுடைய ஹோமாகம பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க, ஹிரண மற்றும் ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்