வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இதனைத் தொடர்ந்து 25 தினங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
மஹோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் மஞ்சத் திருவிழாவும், 3ஆம் திகதி மாலை 4.45 மணியளவில் கார்த்திகைத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
5ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் கைலாச வாகனத் திருவிழாவும், 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் வேல் விமானத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
9ஆம் திகதி புதன்கிழமை காலை 6.15 மணியளவில் தேர்த்திருவிழாவும், மறுநாள் 10ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.




