முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. இந்த சத்திரசிகிச்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த சத்திரசிகிச்சை நேற்று (14.08.2026) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிலோ எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்ட சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சையில் வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமில ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை கிழக்கு மாகாண அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்