முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

காட்டு யானை தாக்குதலில் பிக்கு உயிரிழப்பு

மீகலேவ, எத்தத்கல ஆரண்ய சேனாசனத்தில் தியானத்தில் ஈடுபட்டு வந்த 71 வயதான கொபெய்கனே குணரதன தேரர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (10) காலை உயிரிழந்துள்ளார். காலை தானத்தை அருந்திய பின்னர் தனது த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
காட்டு யானை தாக்குதலில் பிக்கு உயிரிழப்பு

மீகலேவ, எத்தத்கல ஆரண்ய சேனாசனத்தில் தியானத்தில் ஈடுபட்டு வந்த 71 வயதான கொபெய்கனே குணரதன தேரர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (10) காலை உயிரிழந்துள்ளார்.

காலை தானத்தை அருந்திய பின்னர் தனது தியான குடிலுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது அவர் எதிர்பாராத காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதிய தானத்திற்காக தேரர் வராததைத் தொடர்ந்து, சேனாசனத்தில் தங்கியிருந்த ஏனைய பிக்குகள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது தியான குடில்களுக்குச் செல்லும் புதர்கள் நிறைந்த பாதையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

19 பிக்குகள் தங்கியுள்ள எத்தத்கல ஆரண்ய சேனாசனமும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசமும் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், இவ்வாறான யானைத் தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மீகலேவ பொலிஸாரும் வனஜீவராசிகள் அலுவலகமும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்