கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுவில பகுதியில் உள்ள தென்னந்தோட்டமொன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (10) காலை கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 70 வயதுடைய ஆண் எனவும், வெள்ளை நிறக் காற்சட்டையும் கறுப்பு நிற நீண்ட கை சட்டையும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை அவதானித்ததில், குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




